மேலும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 2,800 கன மீட்டர் எம் சான்ட் மணலை வருவாய் துரை அதிகாரிகள் பறிமுதல்…

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமங்களை வெட்டியெடுத்தது, அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி குவாரி பணிகள் மேற்கொண்டது மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி கிரஷர் நிறுவனங்கள் செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மூன்று பேர் மீது ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் வட்டம், நிலையூர் பிட் 2 கிராமத்தில் கே.முருகேசன் என்பவருக்கு சொந்தமான குவாரி செயல்பட்டு வந்துள்ளது. இங்கு பட்டா நிலங்களில் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமங்கள் வெட்டியெடுக்கப்பட்டதாகவும், அரசு புறம்போக்கு நிலமான சர்வே எண் 23/2-ல் எவ்வித அனுமதியும் இன்றி கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி வருவாய்த்துறை, புவியியல் மற்றும் கனிமத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து கூட்டுப் புலத்தணிக்கை மேற்கொண்டனர். இதில், நிலையூர் பகுதியில் உள்ள சர்வே எண்கள் 15/2A1, 15/2A2 மற்றும் 20/6A ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,801.04 கனமீட்டர் எம்-சாண்ட் மற்றும் ஜல்லி உள்ளிட்ட கனிமப் பொருட்களை வருவாய்த்துறையினர் நவம்பர் 4ஆம் தேதி பறிமுதல் செய்தனர்.

மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமங்களை வெட்டியெடுத்தது மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கனிமங்களை வெட்டியெடுத்தது தொடர்பாக குவாரி உரிமையாளர் கே.முருகேசனுக்கு திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் ரூ.7 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரத்து 927 அபராதம் விதித்துள்ளார். அதேபோல், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கோபால்சாமி புளூ மெட்டல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.பாரி மற்றும் அபிநயா தென்றல் புளூ மெட்டல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அபிநயா தென்றல் ஆகியோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர் கிருபாகரன் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் குவாரி உரிமையாளர் கே.முருகேசன், ஜி.பாரி, அபிநயா தென்றல் ஆகிய மூன்று பேர் மீதும் ஆஸ்டின்பட்டி போலீசார் 303(2), 316(5), 326, 323 ஆகிய BNS பிரிவுகள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் அரசிற்கு வருவாய் இழப்பு, மற்றும் சில பிரிவுகளின் கீழ்
ஆகிய வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கல்குவாரி வருவாய் முறைகேடு மற்றும் மோசடி வழக்கின் விசாரணையை ஆஸ்டின்பட்டி காவல் ஆய்வாளர் சிவசக்தி மேற்கொண்டு வருகிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed