கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள பில்லனகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள சாந்த காளியம்மன் மற்றும் உக்ர காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

காப்புக்கட்டுதல், விக்னேஷ்வர பூஜை, லட்சுமி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், ரக்க்ஷாபந்தனம், பரிவார கலச பூஜை, யாக பூஜை, மகா மூல மந்திர ஹோமம், மகா பூர்ணாஹூதியுடன் மேள தாளங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து சிவச்சாரியார்கள் சாந்த காளியம்மன் மற்றும் உக்ர காளியம்மன் சுவாமி மூலவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிேஷகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாந்த காளியம்மன் மற்றும் உக்கிர காளியம்மனை பில்லனகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed