ஸ்ரீவைகுண்டம்: தென்திருப்பேரையில் புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் சுதன் தலைமையில், நிருவாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் அறிவுறுத்தலின்படி,

புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் நிருவாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் ‘எல்லைப் பறவை’ என்.ஆர். சுதன் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலாளர் ஆழ்வை. செல்வக்குமார் முன்னிலை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர் மாடசாமி வரவேற்றார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றியப் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 'உள்ளாட்சித் தேர்தலில்' போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் திரைப்பட நடிகரும், டெல்லி மேல்சபை உறுப்பினருமான கமலஹாசன் 2003 ஆம் ஆண்டு கைவிட்ட 'சண்டியர்' படத்தின் தலைப்பை வைத்து படம் எடுக்கப் போவதாக அறிவித்திருப்பது சகோதரத்துவமாகச் செயல்படும் தென் தமிழக மக்களிடையே மோதலை உருவாக்கும் செயல் என்றும், அதனைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆறுமுகமங்கலம் தேவேந்திரகுல மின் பொறியாளர் கவின் படுகொலையை நீர்த்துப் போகச் செய்யும் வஞ்சகக் கும்பலைக் கண்டித்தும் அந்த கும்பலை தேவேந்திரகுல வேளாளர் மக்கள் நம்ப வேண்டாம் என வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டச் செயலாளர் என்.ஆர். சுதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீவை. அய்யாதுரை, ஆழ்வை. அரவிந்த், ஆறுமுகமங்கலம் இராஜேந்திரன் உள்ளிட்ட நிருவாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி.இன் / நெல்லை.
கைப்பேசி எண்: 8825850212

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed