பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து பத்திர எழுத்தர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் திருவள்ளுரில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணி பாதிக்கப்பட்டது:
ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும்போது பல்வேறு குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஏஐ தொழில்நுட்பம் மூலம் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் குற்றச்சாட்டு ,

தமிழக பத்திரப்பதிவுத்துறையில் ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரத்தை அழித்து தனியார் மாதிரி பத்திரப் பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் இணை சார் பதிவாளர் அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு பத்திரம் எழுத்தாளர் நலச்சங்கம் சார்பில், கருப்பு பேட்ஜ் அணிந்து பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பத்திரப்பதிவு துறையை இ-டெண்டர் மூலம் தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும். அரசாணை எண் 164-இன் அடிப்படையிலான டிஜிட்டல் ஹப் மற்றும் தனியார் பங்களிப்புத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

தற்போதைய ஆவணஎழுத்தாளர் நடைமுறையை முழுமையாகப் பாதுகாத்து, அதனை தொடர்வதற்கான தெளிவான உத்தரவாதம் வழங்க வேண்டும். ஆவண எழுத்தாளர்களின் தொழில் உரிமையையும், அவர்களைச் சார்ந்து பணிபுரியும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். தற்போதைய நடைமுறையில் ஆவண எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சேவைக் கட்டணத்தை நியாயமான அளவில் உயர்த்த வேண்டும்.
முத்திரைத்தாள் பயன்பாடு, விற்பனை மற்றும் அதனைச் சார்ந்த தொழில் வாய்ப்புகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவண எழுத்தர்கள், தட்டச்சு தொழிலாளர்கள், பத்திரம் விற்பனையாளர்கள், வழக்கறிஞர்கள், ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சார் பதிவாளர் அலுவலக பத்திரப்பதிவை புறக்கணித்து திருவள்ளூர் இணை சார்பதிவளர் அலுவலகங்கள் முன்பாக கோஷங்கள் எழுப்பினர்.

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும்போது பல்வேறு குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஏஐ தொழில்நுட்பம் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதனால் திருவள்ளூர் மாவட்ட இணை சார்பாக அலுவலகங்களில் பத்திரப்பதிவு முற்றிலும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் A . மகேஷ் / எதிரொலி . இன் / 8939476777
