பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றானதும், ஒட்டியாண பீடமாக விளங்குவதுமான காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து, காஞ்சி காமாட்சி அம்மன் ஊதா நிற ஜரிகைப்பட்டுச் சேலை உடுத்தி, திருவாபரணங்கள் மற்றும் மல்லிகைப் பூ, மனோரஞ்சிதப் பூ, சாமந்திப் பூ மலர் மாலைகள் அணிந்து, கையில் கரும்பு ஏந்திய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

பின்னர், மேளதாள வாத்தியங்கள் முழங்க, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கோபுர வாசலுக்கு எழுந்தருளினார். அப்போது கோயில் ராஜகோபுரத்தின் முன்பு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக 30 ஆயிரம் வாலா சரவெடி பட்டாசுகள் முழங்க, அம்மன் ஊர்வலமாகப் புறப்பட்டார்.

காஞ்சிபுரத்தின் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்த காமாட்சி அம்மனை, வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து, மனமுருகி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

​தீபத்திருநாளை முன்னிட்டு திருக்கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.

செய்திகள் : லட்சுமி காந்தன் / எதிரொலி . இன் / 8949476777

​

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed