​
​காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில், காஞ்சிபுரம் மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இசைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் சிறப்பு நினைவஞ்சலி இசைக்கச்சேரி பொதுவெளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தேவாவின் சகோதரரும் ‘சாம்ராஜ்யம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் இசையமைப்பாளருமான முரளி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர், திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, அனைவரும் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

​அதன்பின்னர் மேடையில் ஏறிய இசையமைப்பாளர் முரளி, பிரபல பாடலான “மீனாட்சி மீனாட்சி… அண்ணன் காதல் என்னாச்சு…” என்ற பாடலைப் பாடி ரசிகர்களை நெகிழ வைத்தார். மேலும், இந்நிகழ்வில்,
​லக்ஷ்மண் ஸ்ருதி லக்ஷ்மன்
​மேடை மெல்லிசைக் கலைஞர்கள் சங்க மாநிலச் செயலாளர் ஜெரோம் , மாநிலப் பொருளாளர் சாய் சுரேஷ்
​காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கதிர், செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் ஸ்டீபன்​உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றினர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அன்னதான நிகழ்வில் இசையமைப்பாளர் முரளி கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து மேடை மெல்லிசை இசைக்கச்சேரி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

செய்திகள் : லட்சுமி காந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed