ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தலின்படி, குறு, சிறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்டத் தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில், மாவட்டத் தொழில் மையத்தின் வாயிலாகச் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ், தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே மேற்கொண்டு வரும் தொழில்களை விரிவுபடுத்துவதற்கும் வங்கிக் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

மேலும், இம்முகாமின் வாயிலாக 33 பயனாளிகளுக்கு ரூ.204 இலட்சம் மதிப்பிலான வங்கிக் கடன் ஆணைகள் வழங்கப்பட்டன.
முகாமில் 110 பேர் கலந்து கொண்டு தொழில் கடன் வசதிகள் , சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்த விவரங்களைப் பெற்றனர். இதேபோன்று, தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் அடுத்த மாதமும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் கடன் வசதிகள் முகாம் நடத்தப்பட உள்ளது.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed