தமிழகத்தில் மிகப்பெரிய தர்காவான நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் பெரிய ஆண்டவர் கந்தூரி திருவிழா நவம்பர் 10ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்க இருக்கிறது. நாகூர் ஆண்டவர் மறைந்து 469 வருடம் ஆகும் நிலையில் 470ம் வருட திருவிழா நவம்பர் 10ம் தேதி தொடங்குகிறது.

நாகூர் தர்காவில் ஐந்து மினராக்கள் உள்ளது, இந்த மினராக்களில் வரும் நவம்பர் 10ம் தேதி திருவிழா தொடக்க நாளாக கொடி ஏற்றப்படும், இதற்க்கு முந்தைய நிகழ்வான மினராக்களில் பாய் மரம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை ) காலை 5.40 மணிக்கு தொடங்கியது. முதலில் சாஹிப் மினராவில் பழக்கவழக்கப்படி பாய்மரம் ஏற்றப்பட்டது , பின்னர் தஞ்சாவுர் மகராஜா கட்டி கொடுத்த பெரிய மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது, அதன் பின்னர் தொடர்ச்சியாக பிற மினராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது. கந்தூரி விழா சிறப்பு ஏற்பாடுகளை தர்கா தலைமை அறங்காவலர் நஜ்முதீன் சாஹிப் தலைமையில் போர்டு ஆப் டிரஸ்டிகள் செய்து வருகின்றனர். நாகூர் தர்கா ஆலோசனைக் குழு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்கள் முன்னிலையில் இந்த விழா தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நகராட்சி, காவல்துறை சுகாதாரத்துறை மற்றும் ஏனைய துறைகள் நாகூர் தர்காவிற்கு வரும் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : நாகை மணிவண்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed