பொன்னேரியில் தற்போது பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரக்கூடிய நூலகம் மிகவும் பாரம்பரியமான ஒரு நூலகம் ஆகும், தமிழ்நாட்டில் பொது நூலக சட்டம் (Madras Public Libraries Act, 1948) இற்றப்பட்ட பிறகு அதன் அடிப்படையில், 01/08/1954 ம் ஆண்டு ஒரு வாடகை கட்டிடத்தில் துவக்கப்பட்ட நூலகம் தான், தற்போது 17,000 கும் மேற்பட்ட உறுப்பினர்களுடனும், 350 கும் ஏற்பட்ட புரவலர்களுடனும், பெரும் புரவலர்கள் 13 பேரும், கொடையாளர்களாக தனலட்சுமி மோகனசுந்தரம், வனம்மா குமாரசாமி, வழக்கறிஞர் காளமேகம் ஆகியோர்களும், பெரும் கொடையாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜ் அவர்களும் இருந்து வருகின்றனர்.

பொன்னேரியில் இந்த நூலகத்தின் முன்னாள் நூலகராக இருந்த பேனிக் பாண்டியன் அவர்களுடைய தீவிர முயற்சியின் மூலம் பொன்னேரி நூலகத்திற்கு புரவலர்கள் மற்றும் கொடையாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து சிறப்பாக செயல்பட்டதன் வாயிலாக, தரைத்தளத்தில் மட்டும் இயங்கி வந்த நூலகம் 2007 ம் ஆண்டு கிட்டத்தட்ட 8 லட்சம் ரூபாய் செலவில் முதல் மாடி கட்டப்பட்டது. பின்னர், வாசகர் வட்டத்தின் பெரும் உதவியுடன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாஸ்கர் சுந்தரம் மற்றும் நக்கீரன், ஜோதீஸ்வரன் ஆகியோருடைய உதவியுடன் மாடியில் கட்டப்பட்ட நூலகத்திற்கு குளிர்சாதன வசதிகள் மற்றும் கணினி வசதிகள், போட்டித் தேர்வுகளுக்கு படிக்கக்கூடிய மாணவ – மாணவிகளுக்கு தேவையான புத்தகங்கள் போன்றவை இருக்கும் வகையில் அமைத்து கொடுக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து,
பொன்னேரியில் 2008 ம் ஆண்டு காலகட்டத்தில், டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த காலகட்டத்தில் அந்த நூலகம் கட்டுவதற்கான இடம் கிடைக்காத சூழ்நிலை இருந்தது. அந்நிலையில் பொன்னேரி ஆர்டிஓ வாக அப்போது இருந்த கந்தசாமி அவர்கள் எல் என் ஜி காலேஜ் எதிரில் இருக்கக்கூடிய ஒரு இடத்தை தேர்வு செய்து அதை வருவாய்த்துறை நிர்வாகத்தின் வாயிலாக கையகப்படுத்தி கொடுத்தார். ஆனால் பல அரசியல் சூழலால் அந்த நூலக கட்டிடம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டு அப்போது கட்ட முடியாமல் போனது. அந்த சூழலில், ஆர்.டி.ஓ கந்தசாமி அவர்கள் நூலகம் கட்டுவதற்காக கையடகப்படுத்தப்பட்ட அந்த இடத்தை பொன்னேரியில் எப்போது நூலகம் வந்தாலும், அந்த இடத்தில் தான் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த இடத்தை நூலகத் துறைக்கு ஒப்படைத்தார்.

அதன் பிறகு, கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வந்த சூழ்நிலையில், பொன்னேரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அறிவு சார் மையத்தை எல்.என்.ஜி காலேஜ் வளாகத்தின் உள்ளே கட்டுவதற்காக பொன்னேரி நகராட்சி தலைவர் மருத்துவர் பரிமளம் விஸ்வநாதன் அவர்கள் முயற்சி எடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டார். ஆனால், கல்லூரியின் முதல்வர் கல்லூரி வளாகத்தில் நூலகம் கட்டுவதற்கு அனுமதி வழங்காமல் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் அப்போதும் புதிய நூலகம் கட்டும் பணி நின்று போனது.

இதற்கிடையே, பொன்னேரியில் ஆர்.டி.ஓ வாக இருந்த கந்தசாமி அவர்கள் ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு பெற்ற பிறகு அவருக்கு பொன்னேரியில் இருக்கக்கூடிய சமூக ஆர்வலர்கள் சார்பில், காலேஜ் வளாகத்தில் ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, தற்போது ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருக்கக்கூடிய கந்தசாமி ஐயா அவர்கள் அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, இறுதியில் பொன்னேரியில் நூலகம் இதுவரை கட்டாதது குறித்து கவலை தெரிவித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அவர்களிடம் பொன்னேரியில் மீண்டும் அறிவு சார் மையம் கட்டிடம் வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவருடைய ஆலோசனையின் படி, மீண்டும் அறிவு சார் மையம் கட்டிடம் பொன்னேரி பகுதியில் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இப்படி பொன்னேரியில் புதிய நூலகம் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக கட்டப்பட்டு இருக்கும் நூலக திறக்கப்பட்ட பிறகு அதை யார் ? நிர்வாகம் செய்வார்கள் என்பது இப்பகுதி மக்களுக்கு புரியாத ஒரு புதிராக இருந்து வருகிறது.

இந்த புதிய கட்டிட நூலகத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், நூலக துறையிடம் ஒப்படைக்காமல் நகராட்சி நிர்வாகமே இதை நிர்வகிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், அது எந்த அளவிற்கு இப்பகுதி மாணவ மாணவிகளுக்கு உதவியாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதற்குக் காரணம், இதே திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி, ஆவடி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே கட்டப்பட்டு நூலகத் துறையிடம் ஒப்படைக்காத நூலக கட்டிடங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை நாம் சிறிது கவனித்து பார்த்தால் புரியும்,

இந்த நிலைமை பொன்னேரியில் மட்டுமல்ல, கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட நூலகத்தை சரிவர நிர்வகிக்க முடியாத சூழ்நிலை இருந்து வருவது போல், தற்போது பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் புதிதாக கட்டப்படும் நூலகங்கள் யார் நிர்வகிப்பது ? என்பது கேள்விக்குறியாகவே இருக்கக்கூடிய சூழ்நிலை இருந்து வருகிறது. எது எப்படியோ, கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்படும் கட்டிடங்கள், நினைவு சின்னங்களாக நின்று விடாமல், மக்களின் பயன்பாட்டிற்கு இருக்கும் வகையில் அமைத்து கொடுத்தால் நல்லது.

P.G.பாலகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed