
வரும் 09.11.26 முதல் 16.11.26 ம் தேதி வரை கந்த சஷ்டி விழாவிற்காக பக்தர்கள் தங்க அனுமதி திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வரும் 10 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருக்கோயில் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி வரும் 08 ஆம் தேதி தீபாவளிப்பண்டிகை அன்று பக்தர்கள் இத்திருக்கோயிலில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
மேலும், கோயிலில் நடைபெறயிருக்கும் கந்தசஷ்டி திருவிழாவின் திருநாட்களில் கோவிலினுள் தங்கி விரதமிருக்க வருகைபுரியும் பக்தர்கள் வரும் 09 ஆம் தேதி இரவு முதல் கோயிலில் தங்கி விரதமிருக்க அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
