சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், காஞ்சிரங்காலில் இன்று (05.11.2026) கூட்டுறவுத்துறையின் சார்பில், அத்தியாவாசியமான 10 வகையான காய்கறிகள் அடங்கிய, வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பினை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஏ.குழந்தை ராணி நாச்சியார் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் நுகர்வோருக்கு வழங்கி தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில்கிடைக்கச் செய்யும் வகையில் 10 வகையான காய்கறிகள் மொத்தம் 2550 கிராம் அடங்கிய ஒருங்கிணைந்த தொகுப்பு ஒன்று ரூ.100/- என்ற விலையில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் வாயிலாக தமிழகம் முழுவதும் 128 விற்பனை நிலையங்கள் மூலம் 05.11.2026 அன்று தொடங்கி 07.11.2026 வரை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலை, திருப்பத்தூர் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய மூன்று இடங்களில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100/-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும். ஒவ்வொரு விற்பனை நிலையங்களில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பெரிய வெங்காயம்500 கிராம், தக்காளி 500 கிராம் , கத்தரிக்காய் 250 கிராம் , உருளைகிழங்கு 250 கிராம், கேரட் 200 கிராம் , பீன்ஸ் 200 கிராம், பச்சை மிளகாய் 100 கிராம், எலுமிச்சை 100 கிராம், இஞ்சி 50 கிராம், தேங்காய் 400 கிராம் என மொத்தம் 2550 கிராம் எடைகளை கொண்ட தொகுப்புகளை கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் ரூ100/- க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் பல்பொருள் அங்காடி. காந்தி வீதி சிவகங்கையில், மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலை காந்தி வீதி சிலை அருகில், மானாமதுரையில் மற்றும் திருப்பத்தூர் கூட்டுறவு விற்பனை சங்கம் காரைக்குடி மெயின்ரோடு, சத்யா காம்ப்ளக்ஸ் எதிரில், சிங்கம்புணரியில் ஆகிய மூன்று இடங்களில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை 05.11.2026 அன்று தொடங்கி 07.11.2026 வரை விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ப.ஆகாஷ், அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) திரு.இராஜேந்திர பிரசாத் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர
