குரும்பலூர், ஆலங்குடி மகாஜனம் குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த மு. சுப்புசாமி நாயுடு அவர்களின் மனைவியும், மறைந்த சு. ஞானசேகரன் மற்றும் சு. ரவிசந்திரன், சு.நாகராஜ் ஆகியோரின் தாயாருமான திருமதி சு. ரெங்கநாயகி அவர்கள் இயற்கை எய்தினார்.
அவரது மறைவால் குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், அவரது கண்களைத் தானமாக வழங்கி மற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்ற உயரிய மனிதநேயச் சிந்தனையுடன் குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதையடுத்து, திருமதி சு. ரெங்கநாயகி அவர்களின் விலைமதிப்பற்ற கண்கள், மனிதகுலத்தின் நலனுக்காக திருச்சியில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கண் மருத்துவரிடம் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. கண்தானத்தின் மூலம் பார்வையிழந்தவர்களுக்கு பார்வை கிடைக்கவும், அவர்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை மலரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒருவரின் மறைவுக்குப் பின்னரும் அவரது உடல் உறுப்புகள் மற்றவர்களின் வாழ்வில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவது மனிதநேயத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடாகும். அவ் வகையில், திருமதி சு. ரெங்கநாயகி கண்தானம், இருளில் வாழும் பார்வையற்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றும் உன்னதச் செயலாக அமைந்தது.
தங்களின் அன்புக்குரியவரின் மறைவிலும், பிறரின் நலனை முன்னிறுத்தி கண்தானம் வழங்கிய குடும்பத்தினரின் தன்னலமற்ற செயல் சமூகத்தில் கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. திருமதி சு. ரெங்கநாயகி கண்களைத் தானமாக வழங்கிய குடும்பத்தினரின் மனிதநேயச் செயலைப் பாராட்டி, ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் ஆகியோர் கையொப்பமிட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அச் சான்றிதழில், தங்களின் அன்புக்குரியவரின் விலைமதிப்பற்ற கண்களை மனிதகுலத்திற்கு தன்னலமின்றி வழங்கியிருப்பது, இருளில் இருப்பவர்களுக்கு ஒளியைக் கொண்டுவரும் உன்னதச் செயலாகும் , பார்வையற்றோருக்கு கண்களை கொடையாக அளித்து, கருணையின் கலங்கரை விளக்கமாக உள்ளதையும், மனிதத் துன்பங்களைத் தணிப்பதில் குடும்பத்தினரின் இந்த மகத்தான பங்களிப்பு, நம்பிக்கை மற்றும் மனிதாபிமானத்தின் செயல் என்றும் நினைவுகூறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்தானத்தைச் செயல்படுத்துவதற்கு லயன்ஸ் கிளப் ஆஃப் பிரீமியர் தலைவர் மணி மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் கண்தானம் வழங்குவதற்கு உறுதுணையாக இருந்தனர்.

கண்தானம் என்பது ஒருவரின் மறைவுக்குப் பின்னரும் மற்றொருவரின் வாழ்க்கையில் ஒளியாக வாழ்வதற்கான மகத்தான வாய்ப்பாகும். கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்பட வேண்டும். தங்களின் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தையும், உரிய மருத்துவ வழிகாட்டுதலையும் கருத்தில் கொண்டு கண்தானத்திற்கு முன்வருவது சமூகத்திற்கு அளிக்கும் மிகப்பெரிய கொடையாகும்.
செய்திகள் : விஜயகுமார் / எதிரொலி . இன் / 8939476777
