கும்மிடிப்பூண்டி ரெட்டமேடு சாலையில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேங்க் ஆப் இந்தியா சென்னை மண்டலம் கும்மிடிப்பூண்டி சார்பாக, ஊழலை பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடலை மாணவர்களிடையே நடத்தினர்.

வங்கி மேலாளர் அஜித் பாஷா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமையில் நடைபெற்ற விழிப்புணர் நிகழ்ச்சியில் பேங்க் ஆப் இந்தியா லஞ்ச ஒழிப்பு துறை தலைமை மேலாளர் ஷிவானந்பூரே சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர், மாணவர்களிடையே ஊழலை தடுக்கவும், லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமென அதனை விரிவாக எடுத்துரைத்தனர்.

முன்னதாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ஓவியப்போட்டி, பேச்சு போட்டி நடைபெற்றன வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை வைத்தனர்.

பள்ளி பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் கேசவன் பொருளாளர் ரமேஷ் வங்கி உதவியாளர் கோடீஸ்வரன் மற்றும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் வசந்தா, பிரபாகரன், லாவண்யா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் வங்கி காசாளர் கணேஷ் நன்றி தெரிவித்தார்.

செய்திகள் : S.E.யாகோப் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed