தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 60% விழுக்காட்டில் இருந்து 63% விழுக்காடாக இந்தத் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் அவர்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு  மூன்று நாட்களுக்கு முன்பு 60 % விழுக்காட்டில் இருந்து 63% விழுக்காடாக உயர்த்தி ஜூலை 1ஆம் தேதி முதல் வழங்க  உத்தரவு பிறப்பித்தது அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கும் வழங்க பரிசீலனை செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.விஜய் ஜோசப் அவர்கள் 60 % விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை 3% விழுக்காடு உயர்த்தி 63% விழுக்காடக உயர்த்தி  வழங்க உத்தரவு பிறப்பித்தார் அதோடு மூன்று மாத நிலுவை தொகையையும் தீபாவளி பண்டிகைக்குள் வழங்க ஆணை வழங்கி அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்  

இந்த அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி நிலுவை தொகையையும் தீபாவளி பண்டிகைக்குள் வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.விஜய் ஜோசப் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed