திருநகர் தெய்வீக திருமகன் தேவர் அறக்கட்டளை சார்பாக தலைவர் சசிக்குமார் செயலாளர் கப்பலூர் சரவணன் பொருளாளர் அழகு சுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமையில் இணைச் செயலாளர் முத்துராஜ் துணைத்தலைவர் தேனி சரவணன் முன்னிலையில் 119 தேவர் ஜெயந்தி விழாவும் 64 குருபூஜை விழாவும் திருநகர் தேவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு மதுரை ஆதீனம் மடாதிபதி மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்பு பூஜை நடத்தினார்.

மேலும் திருநகர் பசும்பொன் தெருவில் அறக்கட்டளை சார்பாக 150 முளைப்பாரி வளர்க்கப்பட்டு அதனை முன்னாள் அறங்காவலர்களும் விமான நிலைய குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், ஹைடெக் சொசைட்டி செயலாளர் பால்முருகன் மற்றும் 94வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்யன்ஆகியோர் முறைப்பாரி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

அதன் பின்பு திருநகர் முக்கிய வீதியின் வழியாக முளைப்பாரி ஊர்வலம் வந்து தேவர் பிறந்து மறைந்த இடத்திற்கு கொண்டு வந்து வைக்கப்பட்டு வணங்கினார்கள்
விழாவிற்கு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நந்தகோபால் சர்வேஸ்வரன் சுபாஷ் சந்துரு ஜோதி குமார் வாசுதேவன் கோபிநாத் மகேந்திரன் சரண்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்து மறைந்த திருநகர் இல்லத்தில் மணிமண்டபம் கட்ட 2005 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதை தற்போதைய முதல்வர் விஜய் நிறைவேற்ற வேண்டும் என தெய்வீகத் திருமகன் தேவர் அறக்கட்டளை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed