மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு முஸ்லிம் தெருப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஐந்து நாட்களாக சோழவந்தான் பேரூராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், குடிதண்ணீர் வரவில்லை என பேரூராட்சிக்கு தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சென்று கேட்டபோது பேரூராட்சி பணியாளர்கள் அலட்சியமாக பதில் அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 5 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து
சோழவந்தான் மதுரை செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.

சாலை மறியல் காரணமாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீருடன் கழிவுநீர் தேங்கி சாக்கடை நீரும் கலந்து செல்வதாக பல்வேறு பிரச்சனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில்,

பேரூராட்சியின் 20வது வார்டு முஸ்லிம் தெரு பகுதியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வராதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் மறியல் நடந்த இடத்திற்கு பேரூராட்சி சார்பில் பணியாளர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 10 வது வார்டு திமுக கவுன்சிலர் கொத்தாலம் செந்தில் வேல் அதிமுகவை சேர்ந்த வார்டு செயலாளர் மணி இராமு ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடுகளை செய்தனர்.

அரை மணி நேரத்தில் குடிநீர் வழங்கப்பட்டது மறியல் செய்தால் மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர் மேலும் தெரு கால்வாயில் கழிவு நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளதாகவும் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறிய நிலையில் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

இது குறித்தும் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கவுன்சிலர் கூறினார்
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் குளம் போல் தேங்கிய மழை நீரில் கழிவுநீர் கலந்து சென்ற நிலையில் தற்போது குடிநீரும் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவது பொது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக சோழவந்தான் பேரூராட்சி 10வது வார்டு முஸ்லிம் தெரு பகுதிக்கு நிரந்தரமாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கழிவு நீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed