பொன்னேரி, வேலம்மாள் கல்விப்பூங்கா வளாகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் 16 வயதிற்கு மேற்பட்ட 1,652 மாணவிகள் கலந்து கொண்ட 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு விழிப்புணர்வு தொடர் ஓட்டப்பந்தையம் (Run for Hope) சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டு India Book of Records இல் பதிவு செய்யப்பட்டது.

வேலம்மாள் கல்விக் குழுமத்தின் நிறுவனர். எம்.வி முத்துராமலிங்கம் அவர்கள் பேசுகையில் ;

“வேலம்மாள் கல்விக் குழுமம் கடந்த 41 ஆண்டுகளாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களின் திறன்மிகுக் கனவை நனவாக்கும் சிறந்த பயிற்சிக்களமாகத் திகழ்ந்து வருகிறது. பெண்குழந்தைகளின் கல்வித்திறன்தான் வருங்கால உலகத்தின் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு நிகழ்த்தப்படும் இந்த விழிப்புணர்வு ஓட்டப்பந்தைய நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவிகளையும் பெற்றோர்களையும் அனைவரையும் வாழ்த்தினார்.

வேலம்மாள் கல்விக் குழுமத்தின் இயக்குநர். எம்.வி.எம்.சசிக்குமார் அவர்கள் பேசுகையில் ;

பெண்குழந்தைகள் தங்களின் உடல்நலம், மனநலம், கல்வித்தரம் ஆகியவற்றில் மிகுந்த பொறுப்புணர்ச்சியை உருவாக்கிக்கொள்ளும் போதுதான் நம் தலைமுறைகள் மதிப்பு மிக்க சமூகமாகச் சிறக்கும். தற்போதைய தேவையும் அதுதான் சமூகத்தை வழிநடத்துவதில் சரிபங்கு வகிக்கும் பெண்குழந்தைகள் துணிவுடன் திறமையும் கொண்டிருக்கவேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்கள் வழிகாட்டுதல்களை உணர்ந்து செயல்படவேண்டும் என்றும் வாழ்த்தினார்.

வேலம்மாள் கல்விக் குழுமத்தின் கல்வியியல் இயக்குநர். திருமதி. கீதாஞ்சலி சசிக்குமார் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசுகையில்;

“நவீன உலகில் அனைத்துத் துறைகளிலும் கடுமையான போட்டிகள் நிலவி வரும் சூழலில் மாணவிகள் வெற்றிபெற இப்போதிலிருந்தே தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி, விளையாட்டு, சாதிக்கத்துடிக்கும் மனஉறுதி, வலிமை, திறமை, ஆற்றல் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வு நம் பள்ளிகளின் அனைத்து மாணவிகளுக்கும் சென்றுசேர வேண்டும். மாணவிகளின் மகத்தான சாதனைகளுக்கு வேலம்மாள் கல்வி நிறுவனமும், Ology Girls குழுவும் எப்போதும் மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் துணைநிற்கும் என்றும் உறுதியளித்தார். சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி ஓட்டப்பந்தையத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பொன்னேரி, வேலம்மாள் கல்விநிறுவனங்களின் முதன்மை முதல்வர் திருமதி ஜி.ஆர்.சாந்தி அவர்கள் முன்னிலைப் பேசுகையில்;

“வேலம்மாள் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கல்வியிலும் விளையாட்டிலும் பல்துறைச் சாதனைகள் புரிவதிலும் திறன்மிக்கவர்கள். ஆற்றல்சார் மாணவிகளை உருவாக்குவதில் எமது வேலம்மாள் பள்ளிகள் செயலாற்றிவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். உறுதுணையாக இருந்த பெற்றோர்களையும் உடற்கல்வி ஆசிரியர்களையும் பாராட்டினார்.

உடல்நலப் பயிற்சியாளர் சஞ்சய் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுவையில் ;

“விளையாட்டை விரும்பாதவர் யாருமில்லை. நாள்தோறும் உடற்பயிற்சி செய்து உடலை நன்கு பராமரித்தல் அவசியம். இக்காலத்து மாணவிகள் அதிகப்படியான உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை உடலின் உறுதியே உள்ளத்தின் உறுதி என்று உற்சாகமாகப் பேசிார். பொன்னேரி வேலம்மாள் பள்ளிகளின் 11மற்றும் 12ஆம் வகுப்பில் பயிலும் 16வயதிற்கு மேற்பட்ட 1652 மாணவிகளின் விழிப்புணர்வு ஓட்டப்பந்தையம் India Book of Record இல் பதிவு செய்வதற்குமான பொறுப்பேற்றார்.

வேலம்மாள் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர். என்.சுரேஷ் அவர்கள் இச்சாதனை நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த மாணவிகள், பெற்றோர்கள், வேலம்மாள் பள்ளியின் அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed