காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், ‘ஜஸ் ஆன்கோ கேன்சர் கேர்’ மற்றும் ‘ஜஸ் ஆன்கோ பாலியேட்டிவ் கேர் டிரஸ்ட்’ இணைந்து புதிய நோய்த்தணிப்பு பராமரிப்பு சேவையைத் தொடங்குகின்றன.

​புற்றுநோய் சிகிச்சையில் மனநலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், “உங்கள் மன அதிர்வுகளைப் பற்றிப் பேசுங்கள் – மனோ-புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு பன்முக அணுகுமுறை”என்ற தலைப்பில் தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில், மனநல மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் அர்த்தனாரி மற்றும் ஜஸ் ஆன்கோ அமைப்பின் நிறுவனர் டாக்டர் விஜயலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

​நிகழ்ச்சியில் பேசிய நிறுவனர் டாக்டர் விஜயலட்சுமி , “முற்றிய நோய்நிலைகள் மற்றும் முழுமையாகக் குணப்படுத்த முடியாத இறுதிக்கட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அவர்களின் இல்லங்களிலேயே சென்று தேவையான பாலியேட்டிவ் கேர் சிகிச்சைகளை வழங்க இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. வலி நிவாரணம், உணர்வுப்பூர்வமான ஆதரவு மற்றும் நோயாளிகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்” என்றார்.

மேலும், புற்றுநோய் என்றாலே மரணம் அல்லது தீராத வலி என்ற பயம் பொதுமக்களுக்கும், நோயாளிகளின் குடும்பத்தினருக்கும் ஏற்படுகிறது. இந்த அச்சத்தைப் போக்குவதற்கும், சரியான நேரத்தில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான மனநல மற்றும் உடல்நல ஆலோசனைகளை வழங்குவதற்கும் இத்தகைய முன்னெடுப்புகள் பெரிதும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

​

இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் அரவிந்த், நிஷானா மற்றும் பாலியேட்டிவ் கேர் பராமரிப்பு மருத்துவர் டாக்டர் கஜசராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று, புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், அவற்றை நிர்வகிக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளித்தனர்.

பேட்டி. விஜயலட்சுமி.ஜஸ் ஆன்கோ அமைப்பின் நிறுவனர்

செய்திகள் : லக்ஷ்மி காந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed