கிருஷ்ணகிரி மாவட்டம், மூக்கண்டப்பள்ளி அருகே உள்ள கொத்தூர் கிராமத்தில் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைகளை கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருந்து வரும் இடத்திற்கு இலவச பட்டா கேட்டு கடந்த பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் கோரிக்கை மனுக்கல் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது

இதனால் வறுமை கோட்டிற்கு வசிக்கும் இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஓசூர் மாநகர கவுன்சிலர் மஞ்சுநாத் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாரை சந்தித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் இடத்திற்கு இலவச பட்டா வழங்க கோரி தங்களுடைய கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

இது குறித்து பேசிய மாநகராட்சி கவுன்சிலர் மஞ்சுநாத், ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தில் கடந்த 20 வருஷத்துக்கு ஆண்டுகளுக்கு மேலாக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என வேறு எந்த நிலமோ , வீடுகளும் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் அதே இடத்தில் குடியிருந்து வரும் இடத்திற்கு ஒரு சிலருக்கு வீட்டு இலவச மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது ஆனால் மீதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்காமல் உள்ளனர் ஆகையால் இனியாவது 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிந்து வரும் இவர்களுக்கு இலவச பட்டாவழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed