தவெகாவிற்கு ஓட்டு போட்டதால் பஸ் வராது ” என, அலட்சியமாக அதிகாரிகள் பதிலளித்ததாக பெண்கள் ஆத்திரம்…

அந்த வழியாக வந்த தவெக எம்எல்ஏ கருப்பையாவை மறித்து கேள்வி கேட்ட நிலையில் 5 மணி நேரம் கழித்து பேருந்து வந்ததால் பொதுமக்கள் நிம்மதி…

மதுரை மாவட்டம் ​சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால், பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சுபகாரியங்களுக்குச் செல்ல ஏராளமான பொதுமக்கள் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் மதியம் ஒரு மணி முதல் பேருந்துக்காக காத்திருந்தனர்.

​ஆனால், சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் வராததால், முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் மழையிலும் குளிரிலும் நிற்க முடியாமல் தவித்து வந்தனர்

இது குறித்து பேருந்து ஓட்டுநர்களிடம் முறையிட்டபோது, அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாகவும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஓட்டு போட்டதால் பஸ் வராது என அலட்சியமாக பதில் சொன்னதாகவும் கூறப்படுகிறது

​இதனிடையே, அந்த வழியாகச் சென்ற தவெக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம்எல்ஏ பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பெண்களைப் பார்த்தவுடன் காரில் இருந்து கீழே இறங்கினார் . அப்போது அங்கிருந்த பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவிடம் 4 மணி நேரத்திற்கு மேலாக பேருந்து வராத குறித்தும் அதிகாரிகள் முறையாக பதில் சொல்லாத குறித்தும் புகார் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கிருந்தவாறு அதிகாரிகளிடம் போனில் பேசிய எம்எல்ஏ உடனடியாக பேருந்து அனுப்ப வேண்டுமென கண்டிப்புடன் கூறினார். அதன் பிறகும் பேருந்து வரவில்லை என கூறப்படுகிறது
பின்னர் பணிமனை அதிகாரிகளை கடுமையாகக் கண்டித்த அவர், உடனடியாக திருமங்கலத்திற்கு கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு கூறி அங்கிருந்து சென்று விட்டார் எம் எல் ஏ சென்று அரை மணி நேரம் கழித்து பேருந்து வந்ததாக கூறப்படுகிறது தினசரி இதேபோன்று நடப்பதாகவும் சோழவந்தான் இருந்து திருமங்கலத்திற்கு முறையாக பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனவும் அங்கிருந்து பயணிகள் மற்றும் பெண்கள் குற்றம் சாட்டினர் . போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் உடனடியாகச் தலையிட்டு இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான் பகுதியில் தாக எம்எல்ஏ கருப்பையா அடுத்தடுத்த பொது மக்களின் கண்டனத்திற்கு உள்ளாக்குவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது வரை முறையாக பேருந்துகளை இயக்கப்படுவதில்லை என தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் வெற்றி பயணத் திட்டத்தில் பெண்களை உதாசீனப்படுத்துவதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர் ஆகையால் சோழவந்தான் பகுதியில் பேருந்துகளை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed