டிரஸ்ட் நிறுவனரும், சமூக சேவகருமான கே.ஏ.ஓ. சாதிக் ஏற்பாடு:
சின்சியர் ஜமால் முகம்மது ஈஸா, கணேசமூர்த்தி முன்னிலை!


திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம்
அல் முபீன் குரூப்ஸ் டிரஸ்ட் சார்பாக மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் வைத்து பெண்களுக்கான தையல், ஆரிக்கலைப் போட்டி மேலப்பாளையம் ‘அல் முபீன் குரூப்ஸ் டிரஸ்ட்’ நிறுவனரும், சிறந்த சமூக சேவகருமான கே.ஏ.ஓ. சாதிக்
தலைமையில் நடைபெற்றது.

மேலப்பாளையம் அப்ரார் உசேன், பரக்கத் நிஷா, அலிமா பானு, சிரீன் முனிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கம் மேனாள் தலைவரும், சின்சியர் சமூக சேவை நிறுவனத்தின் தலைவருமான அ.ஜமால் முகமது ஈஸா மற்றும் ரொட்டேரியன் கே.ஜி.கே. கணேசமூர்த்தி ஆகியோர் போட்டியின் கண்காணிப்பாளராகப் பணியாற்றி போட்டியில் பங்கேற்றவர்களைப் பாராட்டினர்.

இந்த போட்டி தொடர்பாக மேலப்பாளையம் அல் முபீன் குரூப்ஸ் டிரஸ்ட்டின் நிறுவனர் சிறந்த சமூக சேவகர் சாதிக், செய்தியாளர்களிடம் கூறுகையில், “மேலப்பாளையம் பகுதியில் உள்ள பெண்கள் சுய தொழில் செய்து தங்கள் குடும்பத்தை சிறப்பாக நடத்தும் வகையில் இந்த “தையல் மற்றும் ஆரி கலை போட்டி” நடத்தப்படுவதாகவும், இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் பங்கேற்றனர் என தெரிவித்தார்.

மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யார் யார் என்பது தொடர்பாகவும், சிறப்புப் பரிசு பெறுவோர் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் கூறினார். இறுதியாக சுவைரியா நன்றி கூறினார்.

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி.இன் / நெல்லை.
கைபேசி எண்: 8825850212.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed