தமிழக அரசின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பள்ளியின் மேற்பார்வையார் கோவிந்தசாமி, ஒய்வு பெற்ற கல்வி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இக்கூட்டத்திற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கங்கிரஸ் துணைத் தலைவருமான பி.சி. சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு பேசுகையில்…
பள்ளியின் மேலாண்மை கட்டமைப்புகளை அதிகப்படுத்தியதன் விளைவாக இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக 100 சதவிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஆகையால் தமிழக அரசின் நலத்திட்டங்களை முழுமையாக பெற்றிட மாணவ, மாணவிகளை அதிக அளவில் அரசுப்பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி ஹேமலதா, துணைத் தலைவர் விஜய்குமார் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவப்படுத்தியதோடு பள்ளி வளர்ச்சிப்பணிகளில் அதிக கவனம் செலுத்தி தமிழகத்தின் மற்ற பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்றும் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது பள்ளி ஆசிரியர்களான திருமதி அமலா ஆரோக்கியமேரி, சகாய ஆரேக்கியராஜ், சதிஷ், முனிராஜ், சிவகுமார்திருமதி சுபாஷினி உள்ளிட்ட புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பனர்களும் கலந்துக் கொணடனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
