திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள நாலூர் ஊராட்சியில் ஆண்டு தோறும் மழை காலங்களில் மழைநீர் தேங்கி தண்ணீர் வடியாமல் பொதுமக்களுக்கு பல்வேறு விதங்களில் இன்னல் ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நாலூர் ஊராட்சியில் உள்ள மழை நீரை வெளியேற்றுவதற்கு தோண்டப்பட்ட கால்வாயால் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பத்மாவதி நகர் பகுதியில் தண்ணீர் புகுந்தது. அப்பகுதி மக்கள் இந்த ஆண்டு மழை நீர் கால்வாய் செல்லும் பகுதியில் அடைப்பு ஏற்பட்டதால் தற்போது பெய்து வரும் கனமழைக்கு தேங்கிய தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி உள்ளது.

இதுகுறித்து நேரில் ஆய்வு செய்ய வந்த மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகி நாலூர் சென்று மழைநீர் வெளியேறுவதற்கான வழிமுறைகளை கண்டறிய ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த ஆண்டு இதேபோல முறையான திட்டம் இல்லாமல் அவசரத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதால் பத்மாவதி நகர் முழுவதும் தண்ணீரில் மூழ்கி விட்டது எனவும், இனி இது போல் செய்யக்கூடாது எனவும், கூறி பீடிஓ வந்த வாகனத்தை மறித்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

பின்னர், பிடிஓ பொதுமக்களிடம் பேசி சரியான வழிமுறைகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த நிலையில் அங்கிருந்து புறப்படுவதற்காக தான் வந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தார். ஆனால் வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை.

நீண்ட நேரம் ஆகியும் வண்டி ஸ்டார்ட் ஆகாத காரணத்தினால் தனியார் வாகனத்தில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அவசர காலங்களில் அரசு வாகனங்கள் இதுபோல் பழுதாகி நின்றால் மழை காலங்களில் எப்படி பணிகள் மேற்கொள்ளமுடியும் என அப்பகுதி மக்கள் வேடிக்கையாக பேசிக்கொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் /. 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed