கணக்கில் வராத ரூ .10, 180 / = பணத்தை கைப்பற்றியத்துடன், ஜிபே மூலம் ரூ.3.5 லட்சம் பணம் பரிவர்த்தனை கண்டுபிடிப்பு.
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை , மாவட்ட ஆய்வு குழு அதிகாரிகள் இணைந்து சம்பவ நாளன்று பரமக்குடி நகராட்சியில் நண்பகல் முதல் நள்ளிரவு வரை அனைத்து இடங்களிலும் துருவி ... துருவி ... திடீர் சோதனை மேற்கொண்டனர் .
சோதனையின் போது கணக்கில் வராத ரூ . 10,180 / = கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் , குறிப்பிட்ட அதிகாரியின் ஜிபே கணக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ரூ .3.5 லட்சம் குறிப்பிட்ட நபர்களுக்கு பணபரிவர்த்தனை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது சம்மந்தமாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் பரமக்குடி பகுதி முழுவதும் பெரும் பர ... பரப்புடன் ... பேசப்பட்டு வருகிறது.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் …
