பேபி பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இன்க்சூர் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறக்கட்டளையான இஞ்சாரா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுவதுடன், அவற்றை நடவு செய்வதற்கும் பராமரிப்பதற்கும் தொடர்ந்து வழிகாட்டுதலும் அதற்கான ஆதரவும் வழங்கி வருகிறது.

இதில் வாழை, கொய்யா, எலுமிச்சை போன்ற பழமரக் கன்றுகள் மூலம் குறுகிய காலத்தில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளையும், சந்தனம், செம்மரம், தேக்கு, மகோகனி போன்ற மதிப்புமிக்க மர வகைகள் மூலம் நீண்டகால வருமான வாய்ப்புகளையும் உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கடந்த மூன்று ஆண்டுகளில், 150 ஏக்கர் விவசாய நிலங்களில் 50,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இலவசமாக நடவு செய்யப்பட்டு, 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டம் விவசாயிகளுடன் நேரடியாக இணைந்து செயல்படுவதுடன், உள்ளூர் பள்ளி மாணவர்கள், சமூகத் தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனத் தன்னார்வலர்களின் பங்கேற்பையும் ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல் மற்றும் கிராமப்புற வாழ்வாதார மேம்பாடு ஆகியவை ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த முயற்சியை மேலும் விரிவுபடுத்தும் வகையில், நடப்பு ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் விவசாயிகளுக்காக கூடுதலாக 50,000 மரக்கன்றுகளை நடவு செய்ய இன்க்சூர் டெக்னாலஜீஸ் நிறுவனம், இஞ்சாரா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் உறுதியளித்துள்ளது.

இந்த முயற்சி விவசாயிகளின் வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவதோடு, நிலையான வேளாண் முறைகளை ஊக்குவித்து, பசுமையான சுற்றுச்சூழலையும் வளமான கிராமப்புறங்களையும் உருவாக்குவதற்கான முக்கியமான நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed