கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கரடிகல் மற்றும் மாடக்கல் ஆகிய பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டி உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த பல தலைமுறைகளாக ராகி, நிலக்கடலை உள்ளிட்ட மானாவரி பயீர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறையினர் இந்த இடம் எங்களுக்கு சொந்தமான இடம், இந்த இடத்தில் குடியிருக்கவோ விவசாயமோ செய்யக்கூடாது.

இந்த இடத்தில் மரம்செடிகள் வைக்க வேண்டிய இருப்பதால் உடனடியாக இந்த இடத்தில் காலி செய்து வேறு இடம் செல்லுமாறு வலியுறுத்தியதாக குறிப்பிடுகிறது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ராம கவுண்டர் தலைமையில் 50 மேற்பட்ட விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி மஞ்சுளா அவர்களை சந்தித்து கடந்த பலத் தலைமுறைகளாக வனப்பகுதியையொட்டி உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு உரிய அனுமதி வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

பின்னர் இது குறித்து பேசிய தமிழக விவசாய சங்கத்தில் மாநில தலைவர் ராம கவுண்டர் …..

அஞ்செட்டி தாலுகா உட்பட்ட மாடகல், கரடிகல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக வனப்பகுதியையொட்டி உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மலை சார்ந்த பயிர்கள் மற்றம் மானாவரி பயீர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்,

இந்த நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் காலம், காலமாக விவசாயம் செய்து வந்த இடத்தினை வனத்றையினர் எங்களுக்கு சொந்தமான இந்த இடத்தில் இனி விவசாயம் செய்யக் கூடாது என கூறி விவசாயிகளை விரட்டி வருகின்றனர்.

ஆகையால் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வந்த அரசு புறம்போக்கு நிலத்தை மீண்டும் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட மாவட்ட ஆட்சியர் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அப்போது விவசாயிகள் ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed