கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்  கனமழை பெய்த நிலையில் மழை வெள்ளம் தேங்கிய பகுதி்களில் மழை வெள்ளத்தை அகற்றவும், மழை நீர் வடிகால் பணிகளையும்  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் தீவிரப்படுத்தினார்.

கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செவ்வாய் கிழமை இரவு முதல்  காலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. இது குறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை வெள்ள தடுப்பு பணிகளில் ஈடுபட்டார்.
தொடர்ந்து புதன்கிழமை கவரப்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் கவரப்பேட்டை பஜாரில் சாலையில் தேங்கி இருந்த மழை வெள்ளத்தை அகற்ற மோட்டர்களை வரவழைத்து முன்னின்று தண்ணீரை அகற்றியபின் அங்கிருந்து சென்றார்.

நிகழ்வின் போது தவெக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இர்ஷாத் உடனிருந்தார்.
பின்னர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மற்றும் சாமிரெட்டி கண்டிகை ஆகிய பகுதிகளில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பாலாஜி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளின் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ எஸ்.விஜயகுமார், அடைக்கப்பட்ட மழை வடிகால்வாய்களை ஜெசிபி இயந்திரங்களை வரவழைத்து தூர்வாரி மழை வெள்ளம் உடனடியாக வடிகால்வாய்கள் மூலம் வெளியேற நடவடிக்கை மேற்கொண்டார். நிகழ்வின் போது கும்மிடிப்பூண்டி நகர தவெக செயலாளர் பழனி, ஒன்றிய செயலாளர் அன்புமலர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள ஜீவா நகரில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததை அறிந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார், பொதுப்பணித்துறை  அதிகாரிகள், மின்சார துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு
மேற்கொண்டார். தொடர்ந்து ஜெசிபி இயந்திரம் மூலம் தற்காலிக கால்வாய் அமைத்து மழைநீர் வடிய செய்யும் பணியில் ஈடுபட்டார். பின் அப்பகுதியில் உள்ள நிர்வரத்து  கால்வாய்களை ஆய்வு செய்தார்.


பின்னர் ஆரம்பாக்கம் கணபதி நகரில் ஆய்வு செய்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார், குடியிருப்புகள் மத்தியில் செல்லும் மழை நீர் கால்வாயைதூர்வாரி  அகலப்படுத்தவும், கால்வாயில் நீர் செல்லாமல் அடைத்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றகும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் உத்தரவிட்டார் .

நிகழ்வின் போது வட்டாட்சியர் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்பாபு, மின்வாரிய செயற்பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் பார்த்திபன், உதவி செயற் பொறியாளர்கள் பன்னீர்செல்வம், கதிரவன், தவெக மாவட்ட பொருளாளர் பிரபாகரன். நகர செயலாளர் விஜய் பழனி எம் எஸ் எஸ் சரவணன்.ஒன்றிய செயலாளர் அருண், தவெக நிர்வாகி என்.எஸ்.ஆர்.நிஜாம், வருவாய் ஆய்வாளர் முரளி, கிராம நிர்வாக அலுவலர் அருள், கிராம  உதவியாளர் முனிவேல், ஊராட்சி செயலாளர் சோபன்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்திகள் : சுந்தர் : எதிரொலி . இன். / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed