மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள ஸ்ரீ பொன் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதியின் அருட்பிரசாதமான லட்டு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. வாடிப்பட்டியில் உள்ள
கே எஸ் குழுமத்தின் சார்பாக டாக்டர் அசோக் குமார் குடும்பத்தினர் அன்னதானத்தை வழங்கினார்கள்
அன்னதான நிகழ்வில் வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஸ்ரீ பொன் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது இதில் டாக்டர் அசோக்குமார் குடும்பத்தினர் கலந்து கொண்டனர் அவர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
