காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அருகே கருமாங்கழனி கிராமத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கல்பனா தனது சொந்த மாநிலமான ஜார்கண்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி வீட்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் சிறுமி வீடு திரும்பாததால், தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

தற்போது வரை சிறுமி கிடைக்காததால் திருப்பெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 8 வயது சிறுமி மாயமான சம்பவம் திருப்பெரும்புதூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed