மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையோடு மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, தேனூர் கிராமத்தில் உள்ள இந்துக்கள் பள்ளி வாசல் திறப்பு விழாவில் தாய்மாமன் சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
கிராம சாவடியில் இருந்து ஊர்வலமாக பட்டாசுகள் வெடித்து சீர்வரிசை எடுத்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வந்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். என்றும் எல்லா சமுதாய மக்களும் ஒற்றுமையோடு வாழ்வோம் என்று பள்ளிவாசல் விழா சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே, புரட்டாசி மாதம் இந்த கிராமத்தில் நடைபெற்ற சுந்தரவல்லி அம்மன் கோவில் திருவிழாவில் பால்குட அக்னி சட்டி நிகழ்ச்சியில் இஸ்லாமிய பொதுமக்கள் சர்பத் மோர் வழங்கி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய நிலையில்,


தற்போது நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்துக்கள் சீர்வரிசை கொண்டு வந்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் தேச ஒருமைப் பாட்டையும் ஒற்றுமையையும் நினைவுபடுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைந்தது சீர் கொண்டு வந்த இந்து சமூகத்தை சேர்ந்த கிராமப் பெரியவர்களுக்கு இஸ்லாமிய நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் இஸ்லாமிய குழந்தைகள் அன்பளிப்புகள் வழங்கியும் இளைஞர்கள் வாசல் வரை வந்து வரவேற்றும் பள்ளிவாசலுக்குள் அழைத்து சென்றது. அங்கு இருந்தவர்கள் மனதில்நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.


சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக கிராம பெரியவர்கள் கூறினார்கள்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
