வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படை சார்பாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் குடியாத்தம் வட்டாட்சியர் பிரியா முன்னிலையில் குடியாத்தம் தீயணைப்பு அலுவலர் சரவணன் தலைமையில் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பது மழைக்காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது மற்றும் தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்கின்றனர் என்பது குறித்த செயல்முறை விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed