கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கேப்ளின் பாய்ண்ட் தொழிற்சாலையின் சமூக பாதுகாப்பு நிதியில் 48லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 21 ஊராட்சிகளுக்கு மக்கும், மக்காத கழிவுகளை மேலாண்மை செய்ய 24 மின்கல வாகனங்களை சனிக்கிழமை தமிழக அமைச்சர் ரா.குமார் வழங்கினார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் செயல்படும் கேப்ளின் பாய்ண்ட் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் 48லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்கும், மக்காத கழிவுகளை மேலாண்மை செய்ய மின் கல வாகனங்கள், வழங்கும் விழா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார், கேப்ளின் பாய்ண்ட் நிறுவன நிர்வாக மேலாளர் டாக்டர் ஸ்ரீதர் கணேசன், இயக்குனர் எஸ்.தீனதயாளன், நிறுவன அதிகாரி கோபிநாத் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா.குமார் பங்கேற்று கும்மிடிப்பூண்டி மற்றும் மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 21 ஊராட்சிகளுக்கு 48லட்சம் ரூபாய் மதிப்பிலான 24 மின்கல வாகனங்களை கொடியசைத்து வழங்கியதோடு, வாகனத்தை அவரே இயக்கியும் பார்த்தார்.

பின் நிகழ்வில் பேசும் போது, தூய்மையான திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்கும் நோக்கிற்கு துணை புரியும் வகையில் கேப்ளின் பாய்ண்ட் நிறுவனம் தனது சமூக பங்களிப்பு நிதியில் மின் கல வானங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கியமைக்கு வாழ்த்து தெரிவித்தவர், ஊராட்சிகளில் குப்பைகளை மேலாண்மை செய்வதில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றவர். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைக்க உதவுவதில் இருந்து வீடுகளிலும், அவர்கள் வசிக்கும் பகுதியிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 6.12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை திறந்து வைத்தார். தொடர்ந்து புதுவாயல் அருகே ஆரணியாற்று கரையோரத்தில், நீர்வளத்துறை சார்பில் 20லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், செய்யப்பட்டு வரும் பருவ மழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையான ஆரணி ஆற்றின் கரையை தூர்வாரி பலப்படுத்தும் பணியை பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.வி.ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, உதவி இயக்குனர் பஞ்சு, பயிற்சி துணை ஆட்சியர் சபரி கிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், ஆரணி வடிநில கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், தவெக மாவட்ட பொருளாளர் ஜி.கிருபாகரன், ஒன்றிய செயலாளர்கள் அருண், அன்புமலர், அசோகன், ஜோதி, நகர செயலாளர் ஜோதி, மாவட்ட
மாணவர் அணி அமைப்பாளர் இர்ஷாத், தவெக நிர்வாகி என்.எஸ்.ஆர்.நிஜாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்திகள் : ஜான் பிரான்சிஸ் /எதிரொலி . இன் / 8939476777
