தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி ஆகிய ஒன்றியங்களில் அடங்கிய ஊராட்சிகளில் 35 மருத்துவ முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, பொதுவாக நோய் தொற்றுகள் அதிகம் பரவல் இருக்கக்கூடிய ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் தொடர்ச்சியாக அந்த மருத்துவ முகாம்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து, குறிப்பிட்ட அந்த மூன்று ஒன்றியங்களில் அடங்கிய ஊராட்சிகளில், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன.

அந்த வரிசையில், இன்று மீஞ்சூர் ஒன்றியம் மேலூர் ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
அந்த முகாமில், பொது மருத்துவம், மற்றும் கண் சிகிச்சை, பிசியோதெரபி சிகிச்சை ஆகிய சிகிச்சைகள் வழங்கப்பட்டது. முகாமில், மேலூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் முகாமிற்கு அதிக அளவில் வந்திருந்து பரிசோதனைகளை செய்து கொண்டதுடன், சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றனர்.
கண் சிகிச்சை முகாமில், இலவச கண் பரிசோதனை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான மேல்பரிந்துறை செய்யப்பட்டது.

இந்த முகாமில் கண் பரிசோதனை செய்து கொண்டவர்களில் சிலர் கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக வேல்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும், மருத்துவ முகாமில் ரத்தப் பரிசோதனை, சர்க்கரை வியாதி பரிசோதனை, உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி அவர்களின் ஆலோசனை பேரில், முகாமுக்கு வந்திருந்த மருத்துவர்கள், நிவேதா, லீனா ஸ்ரீ, தில் திவ்யா, ரிஷப், சுகுமார், ஸ்வேதா, ஸ்வர்ண வர்சினி, ஸ்வேதா, கலைவாணி போன்ற மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் கிராமப்புற பகுதியில் வேல்ஸ் மருத்துவமனை செய்து வரும் சேவைகள் குறித்தும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு முன்னெடுத்து வரும் இலவச சேவைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். மேலும், மருத்துவர்களுக்கு உதவியாக, செவிலியர்கள் திவ்யா, மதுமிதா, பியூலா, ஆகியோர் உதவியாளர்கள் கிஷோர், ராஜ்குமார் ஆகியோரும் வந்திருந்தனர்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின், தேசிய குழு உறுப்பினர், பாலகிருஷ்ணன்,
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மில்டன், செயலாளர் அருள், பொருளாளர் யாக்கோபு, செய்தி தொடர்பாளர் முத்து, ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

இந்த முகாமிற்கு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நிலவழகன் , வாசுகி நிலவழகன், நெல்சன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

செய்திகள் : லெனின் லோகேஷ் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed