கிருஷ்ணகிரி அருகே தானம்பட்டி சாலையில் குறிஞ்சி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் திருக்கோயில்கள் பள்ளிக்கூடங்கள் மத்தியில் அரசு டாஸ்மாக் கடையும் இயங்கி வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமக்களின் அலப்பறையினால் குடியிருப்பு பகுதி மக்கள் தினமும் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் கோவிலுக்கு செல்பவர்களும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த டாஸ்மாக் கடையினால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதோடு அடிக்கடி மதுப்பிரியர்களுக்கு இடையே அடிதடி தகராறும் ஏற்படுகிறது
ஆகையல் குடியிருப்பு பகுதியில் இயங்கும் இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எடுத்து வந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டுள்ள குறிஞ்சி நகர் மக்கள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் கோரிக்கை மனுவினைக் கொடுத்தானர்.

பின்னர் இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள்….
இப்பகுதியில் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் கடையினால் பல்வேறு சிரமங்களுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். இந்த டாஸ்மாக் கடையினால் தினமும் பிரச்சனையாக உள்ளது. குடித்து விட்டு சாலையில் வேகமாக வண்டிகளை ஓட்டுவதினால் தொடர விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுவரை இரண்டு கொலையும் ஏற்பட்டு உள்ளது. ஆகையால் இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777
