இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மை பாரத் கேந்திராவின் போதைப் பொருள் இல்லா விழிப்புணர்வு நிகழ்ச்சியானது கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் இன்று 20.09.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மை பாரத் கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் ராசெட்டி மஞ்சுநாத் வரவேற்புரை ஆற்றினார். ராஜராஜேஸ்வரி நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ஜெயந்தராபுரி சாமிகள் அவர்கள் மற்றும் பள்ளியின் நிர்வாகி சிங்காரவேலன் மற்றும் முதல்வர் கே. அருள் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

மேலும் மை பாரத் கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் ராசெட்டி மஞ்சுநாத் மற்றும் கம்பன் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் மற்றும் செயலாளர் மு.ஸ்ரீரங்கன் ஆகியோரும் தலைமை வகித்தனர். இதில் போதைப் பொருள் இல்லா விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

மேலும் போதை பொருள் ஏற்படும் தீமைகள் தொடர்பான நாடகமும், நடன காட்சிகளும் நடத்தப்பட்டது. மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் மூலமாக சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழா இறுதியில் தேசிய பாடல் பாடி இனிதே விழா நிறைவடைந்தது.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777
