கன்னியாகுமரி மாவட்டம் விநாயகர் சதுர்த்தி விஜர்சனம் ஊர்வலம் இன்று நடந்தது. இந்து மகாசபா சார்பில் சுமார் 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டு லாரிகள், டெம்போக்கள், கார்களில் 2 அடி முதல் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று விஜர்சனம் செய்தனர்.
இந்து மகாசபா மாநில தலைவர் தா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நாகர்கோவில், கோட்டார், பீச் ரோடு, இருளப்புரம், மேல கிருஷ்ணன்புதூர் வழியாக சங்குத்துறை கடலில் கரைப்பதற்காக இளைஞர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்துடன் விநாயகர் விஜர்சன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனால் மாநகருக்குள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாவட்ட எஸ்பி அன்சுல் நாகர் தலைமையில் 1,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
செய்திகள் : சுரேஷ் / எதிரொலி / 893947677
