ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருட்கள் பயன்பாட்டுத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு, கல்லூரி முதல்வர் அ.அறிவழகன் தலைமை தாங்கினார்.
ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் மு. ரேணுகா தேவி அனைவரையும் வரவேற்றார். ராமநாதபுரம் மனநலத்திட்ட சமூகப்பணியாளர் எ.அவினாஷ் போதைபொருட்கள் பயன்பாட்டின் தீங்குகள் அதற்கான தீர்வுகள் , இண்ஸ்டாகிரம் பயன்பாட்டு மோகத்தின் தாக்கம் அவற்றை கையாளும் விதம் , தமிழ்நாடு அரசின் மாணவர் – மாணவியர்கள் நலன் தொடர்பாக உள்ள உதவி மையம் குறித்தும் சிறப்பாக விளக்கினார்.

முகாமில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜெ.ஞானராஜ்,இரா.பாலாஜி,
க.கருணாநிதி, கோ.மானே தனம் , 200 – க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மை பாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் து.பாரதி சிறப்பாக செய்திருந்தார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
