ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று காலை நெசவாளர்கள் முக்கிய பகுதிகளில் கருப்பு கொடி ஏந்தி தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வரும் நெசவாளர்கள் கூலி உயர்வு தொடர்ச்சியான வேலை வாய்ப்பு ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருக்கும் வேட்டி சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாயாண்டி பட்டி தெரு பகுதியில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை மாயாண்டி பட்டி தெரு ஊரணி பட்டி தெரு, கீழப்பட்டி தெரு மாரியம்மன் கோவில் தெரு, முதலியார் பட்டி தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த நெசவாளர்கள் கருப்பு கொடிகளை உயர்த்தி பிடித்த படி அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஊர்வலமாக கிளம்பி தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பிய பேரணியாக வந்தனர்.

பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி
சாலையில் வரும் பொழுது அவர்களை தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாயாண்டி பட்டி பகுதியைச் சேர்ந்த நெசவாளர்கள் சிலர் கூறும் போது ;

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மேற்கொள்ளாவிட்டால் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர். தமிழக அரசை கண்டித்து இன்று காலை நெசவாளர்கள் நடத்திய இந்த கருப்பு கொடி போராட்டத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மதியம் 1:30 மணி அளவில் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் தலைமையில் நெசவாளர்கள் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed