ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது இரண்டு இடங்களில் எரிவதால் அதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த வாரம் அழகர்கோவில் பீட் கிடா பள்ளம் என்ற இடத்தில் காட்டு தீ திடீரென ஏற்பட்டது. ஐந்து நாட்களாக போராடி வனத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையின் மற்றொரு பகுதியான விரியன் கோவில் பீட் பகுதியில் உள்ள ஓடை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரண்டு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு தீ எரிந்து வருகிறது
நேற்று இரவு முதல் இந்த தீ எரிவதால் இன்று அதிகாலையே வனத்துறையினர் தீயை அணைப்பதற்காக விரியன் கோவில் பீட் பகுதிக்கு சென்றுள்ளனர் 10 பேர் கொண்ட குழுவினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இரண்டு இடங்களில் எரிவதால் கூடுதலாக தீயை அணைக்க வனத்துறையினர் செல்ல உள்ளனர்.

கடுமையான வறட்சி தொடர் மழையின்மை கொளுத்தும் வெயில் இது போன்ற பல்வேறு காரணமாக தொடர்ச்சியாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தீப்பிடித்து எரிவதால் வனத்துறையினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர் மேலும் கொளுத்தும் வெயிலிலும் வனத்துறையினர் மலை உச்சி பகுதிக்கு சென்று தீ எரியும் இடத்திற்கு சென்று அணைக்கும் பணியில் சிரமத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்
விரியன் கோவில் பீட் பகுதியில் அதிகளவில் யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கு வசிக்கும் பகுதியாகும் தீ பிடித்த எரிவதால் அந்த பதில் இருந்து வனவிலங்குகள் வேறு பகுதிக்கு சென்று விட்டதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகள் ; தேவதர்ஷினி /. எதிரொலி. / 8939476777
