ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு போக்குவரத்து கழகம் பணிமனை அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடம் அமைந்துள்ளது.
அவரது நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து சமுதாய மக்கள் , அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், பொறுப்பாளர்கள் பெரும் திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்துவர்.

இதனையொட்டி, அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அது சமயம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷிநிகம், பரமக்குடி சார் ஆட்சியர் மரு. சு. வினோதினி பார்த்திபன், நகராட்சி ஆணையாளர் தாமரை, செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
