தன்னார்வ நுகர்வோர் ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளின் ஆலோசர்களை கௌவரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 6 யை மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை அகில இந்திய நுகர்வோர் கூட்டமைப்பும், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையமும் இணைந்து ராஜபாளையம் குமரன் ஸ்விட்ஸ் கூட்டரங்கில் சிறப்பாகக் கொண்டப்பட்டது. மகளிர் அமைப்பு பொறுப்பாளர் ஜெபக்கனி இறைவணக்கம் பாட விழா ஆரம்பமானது. செயலாளர் லட்சுமணசாமி அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் தர்மகிருஷ்ணம ராஜா உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கினார்.

அகில இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக இராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் நுகர்வோர் விழிப்புணர்வு மாநாட்டிற்கு மதுரை மண்டல அளவில் செல்லும் உறுப்பினர்களுக்கு விருதுநகர் மாவட்டத் தலைவர் ரவிக்குமார் அவர்கள் சால்வை, அடையாள அட்டை வழங்கிச் சிறப்பித்தார். மகளிர் அமைப்பு தனலட்சுமி, மதுரை மண்டல செயலர் வசந்த் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தேசிய நுகர்வோர் ஆணையத்தின் மத்தியஸ்தர் அகிலாந்தம் பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு எழுமையான நீதி கிடைக்க வேண்டும். வழக்குகளை விரைவில் முடிக்க மத்தியஸ்தம் செய்யும் அதிகாரத்தை இந்திய அரசு எனக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டினார். மதுரை மண்டல தலைவர் மனோகரன் சாமுவேல் அவர்கள் நுகர்வோர் நீதிமன்றங்கள் 1986 ல் வெளியான நுகர்வோர் பாதுகாப்பில் உள்ள குறைகளை நீதிமன்றங்கள் மூலம் எளிமையாகத் தீர்க்க முடிந்தது. ஒரு வெள்ளைத் தாளில் புகார்களை எழுதி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களுக்கு அனுப்பினால் போதும் அது வழக்காகிவிடும். பொருட்களின் தரத்தை அறிய ஆய்வுக் கூடங்களுக்கு அதனுடைய மாதிரியை அனுப்பினால் விரைவில் அதனுடைய முடிவுகள் எளுமையாகக் கிடைத்துவிடும்.

நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் இருப்பவர்கள் அனைவரும் நீதித்துறை அலுவலர்களைப் போல் செயல்பட மாட்டார்கள். பாதிக்கப்பட்ட நுகர்வோர்களோடு அமர்ந்து கரிசனையோடு 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கும் காலம் இருந்தது. நுகர்வோர் ஆர்வலர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்புகளுக்கும், விழிப்புணர்வு பயிற்சிகளும் உதவிகளும் அரசால் வழங்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் எளிமையாக வழக்குகள் தொடரவும் விழிப்புணர்வு பெறவும் முடிந்தது. 1919 ல் நுகர்வோர் தீர்த்தச் சட்டத்தின்படி நுகர்வேர் குறைதீர்மன்ற வழக்குகள் தாக்கல் செய்யும் முறை மத்திய நீதிமன்றங்கள் போல் அமைந்துவிட்டது.

நுகர்வோர்கள் நீதிமன்றத்திற்குள் வரும் உணர்வு ஏற்படுகிறது. பல நுகர்வோர் வழக்குகள் நுகர்வோர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வருகிறது. 5 ரூபாய்க்கு வாங்கும் பிஸ்கட் பாக்கட்டை ஆய்வுக்கு அனுப்ப 5,000 ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை இருப்பதால் நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்வது குறைந்துவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் செயல்பட்ட மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் குறைக்கப்பட்டு வருகிறது.

எனவே, அனைத்து மக்களும் எளிமையாக தற்போது உள்ள நடவடிக்கைகளைத் தவிர்த்து ஆரம்பக் காலத்தில் உள்ளது போல் எளிமையாக குறைதீர் மன்றங்களை அனுகும் முறையில் சட்டத் திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டும் எனக் கூறினார். மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

தமிழ்நாட்டில் நுகர்வோர் சட்டங்களை படிப்பதற்காக (சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, முதுநிலைப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பிற்காக) தனியாக கல்லூரி அமைத்துத் தரவேண்டும்.

நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் அனைவரும் எளிமையாக அணுகும் வகையில் கட்டணமின்றி புகார் மனுபோல தாக்கல் செய்ய சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும்.

மாவட்டந்தோறும் நுகர்வோர் பொருட்களை ஆய்வு செய்வதற்கும், குறைந்த கட்டணத்தில் அதனுடைய முடிவுகள் பெறவும் சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும்.

1986 ல் நுகர்வோர் சட்டம் ஆரம்பக் காலத்தில் உள்ளதுபோல் நுகர்வோர் ஆர்வலர்களை அமைப்புகள் மூலம் கண்டறிந்து வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிந்துரையோடு உணவுத் துறைக்கு அனுப்பி குறைதீர் மன்ற இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்த பழைய முறை போல் உருவாக்க சட்டத்தில் வழிவகை செய்யவேண்டும்.

மாவட்டந்தோறும் நுகர்வோர் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு பயிற்சியும், உதவிகளும் அரசு செயல்படுத்த வேண்டும்.

தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24, உலக நுகர்வோர் தினம் மார்ச் 15 இந்த இரண்டு தினங்களையும் அதே நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையேற்று மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து அனைத்து துறை செயல்பாடுகளையும் நுகர்வோர் அறியும் வண்ணம் அரங்கம் அமைத்து காட்சிப்படுத்தி ஒருநாள் விழாவாகக் கொண்டாட வேண்டும்.

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், கல்லூரிகள் போன்ற அனைத்து கல்வி நிலையங்களிலும் நுகர்வோர் கிளப் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *