ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கிளையில், பரமக்குடி பாஸ்கரன் தனி நபர் விபத்துக் காப்பீடு , அவரது மகன் பா.ரஞ்சித்குமாரது பெயரில் பிரிமியம் ரூ .250 / = செலுத்தி தனி நபர் விபத்து காப்பீடு (சிறப்பு பாலிசி) ரூ .5,00,000 /= (ரூபாய் ஐந்து லட்சத்திற்கு) எடுத்திருந்தார்கள்.
பா. ரஞ்சித்குமார் கடந்த 27.12.2025 - ந் தேதியன்று அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இதனையொட்டி, பரமக்குடி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கிளையின் அதிகாரிகள் உடனடியாக இந்த விபத்து காப்பீடு கிடைப்பதற்கு மதுரை மண்டல அலுவலகத்தில் முயற்சி செய்து இழப்பீடு ரூ .5,00,000 / = ( ரூபாய் ஐந்து இலட்சம் ) க்கான காசோலையை பரமக்குடி பாஸ்கரனிடம் பரமக்குடி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கிளை மேலாளர் எஸ். கிருஷ்ணவேணி, நிர்வாக அதிகாரி எம். அண்ணாத்துரை வழங்கினர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
