தர்மத்தை காத்து அதர்மத்தை அழிக்க கிருஷ்ண அவதரித்த நாளான கோகுலாஷ்டமி இன்று உலகம் முழுவதும் கொண்டாடாப்படுகிறது.

அதன் ஒருபகுதியாக சென்னை புழல் பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.

கோமாதா பூஜையுடன் தொடங்கிய விழா, துளசி ஆரத்தி, ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம் ஒலிக்கப்பட்டு கீர்த்தனைகள் பாடப்பட்டன.

ராதாகிருஷ்ணனா விக்ரங்களுக்கு பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம், இளநீர், தயிர், நெய், தேன், கற்கண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

கிருஷ்ணனர், பலராமர், சுபத்ரா விக்ரங்களுக்கும் தீபாரதனை காட்டப்பட்டது. அதன்பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed