திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே உள்ள குளத்துமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதற்கட்டமாக விநாயகருக்கு மகா அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி மலர் தூவி மந்திரங்களை ஒலித்து பூஜை செய்தனர்.

பூஜைக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி பிரம்மஸ்ரீ பழனி ஆச்சாரி ஏற்பாடு செய்தார். இதில் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சேவை செய்து வரும் பெண்கள் குழு,ஆண்கள் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed