திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி பொன்னேரி வருவாய்த்துறையினர் முன்னெடுப்பில் பொன்னேரியில் இயங்கி வரும் அன்னை வசந்தம் கல்வியியல் சமூகநல அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,பொன்னேரி நகராட்சி, பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் தன்னாட்சி கலைக்கல்லூரி பங்கேற்பில் நடைபெற்றது.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்தும்,குழந்தை தொழிலாளர் தடுப்பது குறித்தும்,குழந்தைகள் பாதுகாப்பு அவசியம் குறித்தும்,போதை ஒழிப்பு குறித்தும் விளக்கும் வகையில் நடைபெற்ற பேரணி குறித்த விளக்கத்தை பொன்னேரி சார் ஆட்சியர் அப்துல் ராஷித் கூறினார். கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த உறுதி மொழியும் போதை தடுப்பு குறித்த உறுதி மொழியையும் பொன்னேரி சாராட்சியார் அப்துல் ராஷிப் வாசிக்க தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்டவர்கள் வாசித்தனர்.

போதை விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.பின்னர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது பொன்னேரி பேருந்து நிலையத்தில் வந்து நிறைவடைந்தது.

பொன்னேரி நகராட்சி ஆணையர் நளாயினி பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் தன்னாட்சி கல்லூரி பொறுப்பு கல்லூரி முதல்வர் டாக்டர் திருச்சேரன், கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெகஜீவன் ராம்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை சேர்ந்த சங்கீதா,மலர்விழி,ராம்கி,பொன்னேரி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சாமுவேல்,மீஞ்சூர் இரண்டாவது வார்டு கவுன்சிலர் அபூபக்கர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பினை அன்னை வசந்தம் கல்வியல் சமூக அறக்கட்டளை தலைவர் ஆனந்தி செயலாளர் வசந்தகுமார் ஆகியோர் செய்தனர். இந்த பேரணியில் காவல்துறையினர்,சுகாதாரத் துறையினர் சமூக ஆர்வலர்கள்,உ.நா.அரசு கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம்,தேசிய மாணவர் படை,சாரண சாரணியர் இயக்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவிகள்
பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed