கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் இயக்க சீரமைப்பு திட்டத்தின் SSA 2 தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வினை முழுமையாக ரத்து செய்ய வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமரானால் தான் இது சாத்தியமாகும் என்று மறு சீரமைப்பு மேற்பார்வையாளர் ஆர்,டி,வி,சீனிவாசகுமார் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்களின் ஆணைக்கிணங்கவும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்கள் வழிகாட்டுதலின் படியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இயக்க சீரமைப்பு திட்டம் SSA 2* தொடர்பான கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் காமராஜர் பவன் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி, ரகு தலைமையில் நடைபெற்ற இக்கட்டத்திற்கு முன்னாள் மாவட்டத் தலைவர்களான கிருஷ்ணமூர்த்தி, ராஜா குமாரவேல், நாஞ்சில் ஜேசு, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திர வர்மா, மாவட்ட துணைத் தலைவர் பி.சி. சேகர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன்,
சேலம் ரயில் கோட்ட உறுப்பினர் ரகமத்துல்லா காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி,எஸ்.டி, பிரிவின் முன்னாள் அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, சிறுபான்மை பிரிவு மாநிலதுணைத் தலைவர் ஜாவித்கான், நகர் மன்ற உறுப்பினர் வினாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மறு சீரமைப்பு திட்டம் SSA 2 திட்டத்தின் மேற்பார்வையாளர் ஆர்,டி ,வி, சீனிவாச குமார் அவர்கள் காலத்துக் கொண்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் களத்தில் இறங்கி கட்சி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார், இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்பார்வையாளர் ஆர்,டி ,வி, சீனிவாச குமார் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மாவட்டம் வாரியாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக நீட் தேர்வினால் அப்பாவி மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் சத்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது அதற்கு பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமரானால் தான் இது சாத்தியமாகும் என்று இதே போல் உள்ளாட்ச்சி தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி அதிகப்படியான வெற்றிப்பெறவேண்டும் அதற்கான பணிகளில் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றி வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அப்போது கிருஷ்ணகிரி நகர தலைவர் லலித் ஆண்டனி, யுவராஜ், முபாரக், கலைப் பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, வட்டாரத் தலைவர்கள் சித்திக், மிட்டிகிரி ரவி. தனஞ்செயன், கோபாலகிருஷ்ணன், கல்லாவி ரவி, மாரியப்பன், விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் ராமசந்திரன், மீனவரணி செல்வம், மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாண்டுரங்கன், வெற்றிவேல், திம்மராயன், ஏழுமலை, சக்கரவர்த்தி, வாஜித்பாஷா, ஷானவாஸ், சரவணன், குட்டி, சங்கர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
