கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (24.08.2026) ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தாரால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான தீத்தடுப்பு முறைகள் மற்றும் விபத்துக் காலத்தில் தற்காத்துக் கொள்ளுதல், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகிய செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது.


தொடர்ந்து பேரிடர் காலங்களில் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட கருத்துக்களை நிலைய அலுவலர் இராமமூர்த்தி விளக்கினார். உடன் நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வந்த குழுவினர் அனைத்து செயல்முறை விளக்கங்களும் அளித்தனர்.

நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் பூ. இராம்குமார், மு. பயாஸ்பாஷா, ரா.ஜீவா, கணினி பயிற்றுநர் ச.மரகதம் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
