கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே அமைந்துள்ள செட்டிமாரன்பட்டி, ஜான்செருகு மலை அடிவாரத்தில் எழுத்தருளியுள்ள முனியப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

இந்த திருக்கோவிலை செட்டிமாரப்பட்டி, தோட்டிபாறை ஆகிய கிராம மக்கள் ஒன்றிணைந்து புதிதாக பல லட்சம் மதிப்பீட்டில் சுமார் 21 உயரத்தில் காவல் தெய்வமான முனியப்பன் மற்றும் முனியம்மாள் ஆகிய திருஉருவச்சிலை அமைக்கப்பட்ட நிலையில் நவகிரக பிரதிஷ்டையுடன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்த யாகசாலையில் புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை முதல் மற்றும் இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சிவச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை வேள்வியில் அக்னி பகவானுக்கு பூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் கோபுரம் மண்டபத்தின் மீது எடுத்துச் செல்லப்பட்டு முனியப்பன் மற்றும் முனியம்மாளுக்கு புனித நீர்ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது

இதனைத் தொடர்ந்து முனியப்பன் மற்றும் முனியம்மாளுக்கு சிறப்பு பூகைகளும் அலங்கார தீபாதரனைகளும் காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முனியப்பன் மற்றும் முனியம்மாளை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். தொடர்ந்து மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும், இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்படுகளை செட்டிமாரன்பட்டி மற்றும் தோட்டிபாறை கிராமத்தை சேர்ந்த ஊர் கவுண்டர்கள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர். தொடர்ந்து 48 நாள்கள் மண்டல பூஜைகளும் நடைபெற உள்ளது.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed