பிரபல பள்ளிகள் மற்றும் காமாட்சி அம்மன் கோவில் அமைந்திருக்கும் நெருக்கடியான பகுதிகளில் போக்குவரத்துக் காவலர்களை நியமித்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுர வாசல் பகுதி அருகே அமைந்துள்ள எஸ்.எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி, மழலையர் தொடக்க பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகளுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர்.

​இந்நிலையில், காலை 8:30 முதல் 10:00 மணி வரையிலும், மதியம் 12:00 முதல் 1:00 மணி, பிற்பகல் 2:00 முதல் 2:45 மணி வரையிலும், மாலை வேளைகளிலும் அப்பகுதிகளில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

​LKG முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறிய குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர்கள், நெரிசலில் சிக்கித் தவிப்பதால் உரிய நேரத்திற்கு அலுவலகங்களுக்குச் செல்ல முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் வாகனங்களை வேகமாக இயக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விபத்து அபாயமும் ஏற்படுகிறது.

​மேலும், மதிய நேரங்களில் அரை நாள் வகுப்புகள் முடிந்து செல்லும் LKG, UKG குழந்தைகளும், அவர்களை அழைத்துச் செல்ல வரும் முதியவர்களும் சுட்டெரிக்கும் உச்சி வெயிலிலும், வாகன நெரிசலிலும் சிக்கித் தவிக்கும் அவலமும் தொடர்கிறது.

​கோவில் மற்றும் பள்ளிப் பகுதிகளில் கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதாலும், பள்ளிகள் அமைந்திருக்கும் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளாலும் போக்குவரத்து நெரிசல அதிக அளவில் காணப்படுவதால் அவ்வப்போது பள்ளி மாணவ மாணவிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

அதுமட்டுமன்றி பள்ளிக்கூடம் அருகிலேயே தனியாருக்கு சொந்தமான இரண்டு இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிக அளவில் வாடகை வசூலிக்கின்றனர். அதேபோல மாநகராட்சி சார்பிலும் சாலையை ஆக்கிரமித்து ஒரு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பள்ளிக்கூடம் அருகே பார்த்தேன உள்ளதால் அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்பட்டு பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல திக் திக் மனதோடு செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த ஒலிமுகமது பேட்டையில் ‘யாத்ரி நிவாஸ்’ பகுதியில் சுமார் 100 வாகனங்கள் நிறுத்த சுற்றுலாத்துறை மூலம் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டும் அங்கே வாகனங்களை பார்க்கிங் செய்யாமல் பள்ளிக்கூடம் அருகிலேயே வாகனங்களை நிறுத்துவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பெரிய விபத்துக்கள் நடப்பதற்கு முன்னதாகவே பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்துக் காவலர்களைப் பணியமர்த்தி நெரிசலைக் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி. 1. செல்வராஜ். மாவட்ட தலைவர்.தமிழ் மாநில காங்கிரஸ்

பேட்டி.2. வேணுகோபால் ஓய்வு குடிநீர் வாரியம்

செய்திகள் ; லஷ்மிகாந்தன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed