மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பேருந்து நிறுத்தம் அருகே கரும்புச்சாறு கடை ஒருவர் நடத்தி வருகிறார். வழக்கம்போல் மோட்டார் மூலம் இயங்கக்கூடிய கரும்புச் சார் இயந்திரத்தில் கரும்பை மாட்டி கரும்புச்சாலை தயாரித்து கொண்டு இருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக அவரது சட்டையானது திடீரென கரும்பு சாறு எடுக்கும் எந்திரத்திற்குள் திடீரென மாட்டிக் கொண்டது. உடனடியாக, அருகில் இருந்த கல்லூரி மாணவர்கள் சுதாரித்து மோட்டார் மூலம் இயங்கக்கூடிய அந்த கரும்புச்சாறு இயந்திரத்தை உடனடியாக அனைத்த பிறகும் சட்டையை வெளியில் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

உடனே அருகே இருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் அவர் சட்டையை எடுப்பதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் சட்டையை வெளியே எடுக்க முடியாத சூழ்நிலையில், பின்னர் அவர் சட்டையை கழட்ட சொல்லி அதன் பிறகு, சட்டையை கிழித்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நல்வாய்ப்பாக எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை எதிரே காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் துரித செயல்பாட்டினால் மிகப்பெரிய காயத்திலிருந்து கரும்புச் சார் வியாபாரி காயம் இன்றி தப்பினார். அதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

செய்திகள் / காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed